கூலி படத்திற்கு ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்க உத்தரவிடக்கோரிய மனு தள்ளுபடி

கூலி திரைப்படத்துக்கு ‘யு/ஏ’ சான்றிதழ் கோரி சன் பிக்சர்ஸ் தொடர்ந்த வழக்கை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது.
கூலி படத்திற்கு ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்க உத்தரவிடக்கோரிய மனு தள்ளுபடி
Published on

சென்னை,

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 14ம் தேதி உலகம் முழுவதும் வெளியான கூலி திரைப்படம் 400 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனைப் படைத்துள்ளது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இப்படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

இதனால் பெண்கள் தங்களது குழந்தைகளுடன் படம் பார்க்க தியேட்டர்களுக்கு வர முடியாத நிலை ஏற்பட்ட நிலையில் கூலி திரைப்படத்தை யு/ஏ சான்றிதழுடன் தியேட்டர்களில் திரையிட அனுமதிக்க வேண்டும் என சன் பிக்சர்ஸ் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தது. கூலி திரைப்படத்தை யு/ஏ சான்றிதழுடன் திரையிட அனுமதி கோரி படத் தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த வழக்கில் சென்சார் போர்டு பதிலளிக்க உத்தரவிட்டது. இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஐகோர்ட்டு ஒத்திவைத்தது.

இந்நிலையில் கூலி திரைப்படத்துக்கு யு/ஏ சான்றிதழ் கோரி சன் பிக்சர்ஸ் தொடர்ந்த வழக்கை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது. அதாவது, அதிக அளவிலான சண்டைக் காட்சிகள், மது அருந்தும் காட்சிகள் மற்றும் மோசமான வார்த்தைகள் உள்ளதால், குழந்தைகள் அப்படத்தை பார்ப்பதை அனுமதிக்க முடியாது என்று தெரிவித்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com