அரசு மரியாதையுடன் பின்னணி பாடகி ஆஷா போஸ்லே உடலுக்கு இன்று இறுதிச்சடங்கு

மும்பையில் உள்ள சிவாஜி பூங்காவில் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு மரியாதையுடன் பின்னணி பாடகி ஆஷா போஸ்லே உடலுக்கு இன்று இறுதிச்சடங்கு
Published on

மும்பை,

மறைந்த இசைக்குயில் லதா மங்கேஷ்கரின் இளைய சகோதரியான ஆஷா போஸ்லே, தனது 9 வயதிலேயே பாட தொடங்கினார். சுமார் 80 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த இவரது இசை பயணத்தில், தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட மொழிகளில் 12 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களை பாடி கின்னஸ் சாதனை படைத்துள்ளார். இந்தி திரையுலகில் கொடிகட்டி பறந்தாலும், ஆஷா போஸ்லே தமிழ் ரசிகர்களின் இதயங்களிலும் நீங்காத இடம் பிடித்தவர்.

இவர், மும்பையில் உள்ள பெடர் ரோட்டில் வசித்து வந்தார். கடந்த சில நாட்களாக வயது முதிர்வு மற்றும் உடல்நல குறைவால் அவதிப்பட்டு வந்தார். நேற்று முன்தினம் மாலை, ஆஷா போஸ்லேவுக்கு திடீரென மூச்சுத்திணறல் மற்றும் மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அவர் தென் மும்பையில் உள்ள புகழ்பெற்ற பிரீச் கேண்டி ஆஸ்பத்தி ரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, டாக்டர் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

இருப்பினும், நேற்று மதியம் சிகிச்சை பலனின்றி அவர் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 92. உடல் உறுப்புகள் செயல் இழந்ததே அவரது மரணத்திற்கு காரணம் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆஷா போஸ்லேவின் உடல், மும்பையில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு திரையுலக பிரமுகர்கள், இந்தி நடிகர், நடிகைகள் மற்றும் பின்னணி பாடகர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், பொதுமக்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இதற்கிடையே ஆஷா போஸ்லேவின் உடல் இன்று (திங்கட்கிழமை) மும்பையில் உள்ள சிவாஜி பூங்காவில் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com