ரஜினியை நேரில் சந்தித்த கவிஞர் வைரமுத்து

கவிஞர் வைரமுத்து ரஜினிகாந்த்துடன் எடுத்த புகைப்படத்தை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
ரஜினியை நேரில் சந்தித்த கவிஞர் வைரமுத்து
Published on

சென்னை,

இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படம் 'வேட்டையன்'. இந்த படம் வசூல் ரீதியாகவும் விமர்சனம் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. அதனை தொடர்ந்து தற்பேது, லேகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'கூலி' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் தற்போது, தமிழ் சினிமாவின் மூத்த பாடலாசிரியர்களில் ஒருவரான வைரமுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வீட்டில் சந்தித்துள்ளார். வைரமுத்து பல தமிழ் படங்களில் பல நடிகர்களின் படங்களில் பாடல் வரிகளை எழுதியுள்ளார், அதே நேரத்தில் ரஜினியின் 'எந்திரன்' படத்தில் 'அரிமா அரிமா', 'அண்ணாமலை' படத்தியில் 'வெற்றி நிச்சயம்' போன்ற பாடல்களை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் ரஜினிகாந்துடன் நடந்த உரையாடல் குறித்த பதிவை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் "கடிகாரம் பாராத உரையாடல் சிலபேரோடுதான் வாய்க்கும் அவருள் ஒருவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், 80 நிமிடங்கள் உரையாடியிருக்கிறோம் ஒரே ஒரு 'கிரீன் டீ'யைத் தவிர எந்த இடைஞ்சலும் இல்லை இடைவெளியும் இல்லை, சினிமாவின் அரசியல் அரசியலின் சினிமா வாழ்வியல் - சமூகவியல் கூட்டணிக் கணக்குகள் தலைவர்கள் தனிநபர்கள் என்று எல்லாத் தலைப்புகளும் எங்கள் உரையாடலில் ஊடாடி ஓய்ந்த எதுகுறித்தும் அவருக்கொரு தெளிவிருக்கிறது தன்முடிவின் மீது உரசிப் பார்த்து உண்மை காணும் குணம் இருக்கிறது.

நான் அவருக்குச் சொன்ன பதில்களைவிட அவர் கேட்ட கேள்விகள் மதிப்புமிக்கவை தவத்திற்கு ஒருவர்; தர்க்கத்திற்கு இருவர் நாங்கள் தர்க்கத்தையே தவமாக்கிக் கொண்டோம் ஒரு காதலியைப் பிரிவதுபோல் விடைகொண்டு வந்தேன் இரு தரப்புக்கும்அறிவும் சுவையும் தருவதே ஆரோக்கியமான சந்திப்பு அது இது" என ரஜினியுடன் நடந்த உரையாடலையும் அவருடன் எடுத்த புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com