'பொன்னியின் செல்வன்' தயாரிப்பு நிறுவனத்தின் புதிய அப்டேட் - நாளை வெளியாகும் என அறிவிப்பு

பொன்னியின் செல்வன் படத்தை தயாரித்த லைகா நிறுவனம், நாளை காலை புதிய அறிவிப்பை வெளியிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
'பொன்னியின் செல்வன்' தயாரிப்பு நிறுவனத்தின் புதிய அப்டேட் - நாளை வெளியாகும் என அறிவிப்பு
Published on

சென்னை,

தமிழில் கத்தி, கோலமாவு கோகிலா, செக்க சிவந்த வானம், வடசென்னை, எந்திரன் 2.0, டான் உள்ளிட்ட பல படங்களை தயாரித்த லைகா புரொடக்ஷன்ஸ், மணிரத்னம் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தை தயாரித்திருந்தது.

தற்போது கமல் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 திரைப்படம் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் 'லால் சலாம்' மற்றும் அஜித்தின் ஏகே 62 போன்ற படங்களை தயாரித்து வருகிறது. பொன்னியின் செல்வன் 2-ம் பாகம் ஏப்ரல் 28-ந்தேதி வெளியாகும் என்றும் லைகா நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் இந்த தயாரிப்பு நிறுவனம் புதிய அப்டேட் ஒன்று நாளை காலை 10.30 மணிக்கு வெளியாகும் என போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. இது எந்த படத்தின் அப்டேட்டாக இருக்கும் என ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

Lyca Productions (@LycaProductions) March 1, 2023 ">Also Read:

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com