சல்மான் கான் - நயன்தாரா நடிக்க உள்ள புதிய படத்தின் பூஜை வீடியோ வெளியீடு

இந்த படத்தை விஜய்யின் 'வாரிசு' திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்க உள்ளார்.
சல்மான் கான் - நயன்தாரா நடிக்க உள்ள புதிய படத்தின் பூஜை வீடியோ வெளியீடு
Published on

சென்னை,

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகரான சல்மான் கான் இருவரும் இணைந்து புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளனர். இந்த படத்தை விஜய்யின் 'வாரிசு' திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்க உள்ளார். இந்த படத்தை பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு பெரும் பொருட்செலவில் தயாரிக்க உள்ளார்.

சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு பணி மும்பையில் பூஜையுடன் தொடங்கியது. முதற்கட்ட படப்பிடிப்பில் பிரம்மாண்டமான அரங்குகள் அமைத்து படப்பிடிப்பினை தொடங்கியுள்ளது படக்குழு. அடுத்த ஆண்டு இப்படத்தினை வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது.

இந்த நிலையில், சல்மான் கான் - நயன்தாரா இணைந்து நடிக்கும் புதிய படத்தின் பூஜை வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com