அறுவை சிகிச்சை மூலம் அழகை மேம்படுத்தும் நடிகை பூஜா ஹெக்டே

பிரபல கதாநாயகியாக இருக்கும் பூஜா ஹெக்டே அழகுக்காக அறுவை சிகிச்சைக்கு தயாராவதாக இணையதளங்களில் தகவல் பரவி வருகிறது.
அறுவை சிகிச்சை மூலம் அழகை மேம்படுத்தும் நடிகை பூஜா ஹெக்டே
Published on

சினிமாவில் அழகாக இருந்தால்தான் பட வாய்ப்புகள் வரும் என்பதால் அழகை மெருகூட்ட ஒவ்வொரு நாளும் கதாநாயகிகள் பெரு முயற்சிகள் செய்கின்றனர். சிலர் அறுவை சிகிச்சைகள் செய்து புதுப்பொலிவை காட்டுகிறார்கள்.

சில நேரம் அறுவை சிகிச்சை தோல்வி அடைந்து இருக்கும் அழகையும் இழந்த நடிகைகளும் உள்ளனர். தற்போது பிரபல கதாநாயகியாக இருக்கும் பூஜா ஹெக்டே அழகுக்காக அறுவை சிகிச்சைக்கு தயாராவதாக இணையதளங்களில் தகவல் பரவி வருகிறது.

தமிழில் ஜீவாவுடன் முகமூடி, விஜய் ஜோடியாக பீஸ்ட் படங்களில் நடித்துள்ள பூஜா ஹெக்டே தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்து இருக்கிறார். இவரது நடிப்பில் சமீபத்தில் வந்த படங்கள் அனைத்தும் தோல்வி அடைந்து வளர்ச்சியில் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. ராசி இல்லாத நடிகை என்று விமர்சனங்களும் கிளம்பி உள்ளன. அதோடு பூஜா ஹெக்டே மூக்கு அழகாக இல்லை என்ற சர்ச்சையும் கிளம்பி இருக்கிறது.

மூக்கு அழகாக இல்லை என்று பலரும் கூறியதால் அறுவை சிகிச்சை மூலம் அதை சரி செய்ய பூஜா ஹெக்டே முடிவு செய்து இருப்பதாகவும் இதற்காக விரைவில் வெளிநாடு செல்ல இருக்கிறார் என்றும் தகவல் பரவி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com