ஸ்ரீலீலாவின் வாய்ப்பை தட்டிப்பறித்த பூஜா ஹெக்டே

ராம்சரண் நடித்துவரும் 'பெத்தி' படத்தில் இடம்பெற உள்ள குத்து பாடலுக்கு பூஜா ஹெக்டே நடனமாட உள்ளார்.
சென்னை,
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான ராம்சரண் தற்போது புச்சிபாபு இயக்கத்தில் 'பெத்தி' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியானது. விளையாட்டை மையப்படுத்தி உருவாகி வரும் இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இப்படம் அடுத்த ஆண்டு மார்ச் 27-ம் தேதி வெளியாக உள்ளது.
தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இப்படத்தில் குத்து பாடல் ஒன்று இடம்பெற இருப்பதாக தகவல் வெளியானது.
அந்த பாடலுக்கு நடனமாட முதலில் நடிகை ஸ்ரீலீலா தேர்வு செய்யப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது குத்துப்பாடலுக்கு நடனமாட ஸ்ரீலீலாவுக்கு பதிலாக பூஜா ஹெக்டே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே ராம்சரண் மற்றும் சமந்தா இணைந்து நடித்த 'ரங்கஸ்தலம்' படத்தில் பூஜா ஹெக்டே குத்தாட்டம் போட்டது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில் எப்படி ஸ்ரீலீலாவை ஓரங்கட்டி பூஜா ஹெக்டே இந்த வாய்ப்பை தட்டிப்பறித்தார்? என்பதே தெலுங்கு சினிமா வட்டாரத்தில் பேசும் பொருளாக இருக்கிறது.






