ஆஸ்பத்திரியில் அனுமதி பிரபல நடிகருக்கு அறுவை சிகிச்சை

ஆஸ்பத்திரியில் அனுமதி பிரபல நடிகருக்கு அறுவை சிகிச்சை
Published on

தமிழில் 'அன்பு' படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் பாலா. இவர் ரஜினிகாந்துடன் அண்ணாத்த, அஜித்குமாரின் வீரம் மற்றும் காதல் கிசுகிசு, அம்மா அப்பா செல்லம் உள்ளிட்ட தமிழ் படங்களிலும் நடித்து இருக்கிறார்.

மலையாளத்தில் அதிக படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வருகிறார். பிரபல டைரக்டர் சிறுத்தை சிவாவின் சகோதரர் பாலா என்பது குறிப்பிடத்தக்கது. பாலாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து கொச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

பரிசோதனையில் அவருக்கு கல்லீரலில் பிரச்சினை இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவசர சிகிச்சை பிரிவில் வைத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். பாலாவுக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய டாக்டர்கள் முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. நடிகர் உன்னிமுகுந்தன் உள்ளிட்ட மலையாள நடிகர்கள் பலர் ஆஸ்பத்திரிக்கு சென்று பாலா உடல் நிலை குறித்து விசாரித்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com