கார் விபத்தில் சிக்கிய பிரபல பாலிவுட் நடிகர் - ஐசியுவில் அனுமதி

கார் விபத்தில் சிக்கிய பாலிவுட் நடிகர் பர்வின் தபாஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளார்.
கார் விபத்தில் சிக்கிய பிரபல பாலிவுட் நடிகர் - ஐசியுவில் அனுமதி
Published on

மும்பை,

பாலிவுட்டில் பிரபல நடிகராகவும், இயக்குனராகவும் இருப்பவர் பர்வின் தபாஸ். இவர் 'மை நேம் இஸ் கான் மற்றும் ராகினி எம்எம்எஸ்' போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். இவர் ப்ரோ பாஞ்சா லீக் போட்டியின் இணை நிறுவனரும் ஆவார். மேலும் இவர் பாலிவுட் தவிர, மலையாளம் மற்றும் கன்னட படங்களில் பணியாற்றியுள்ளார்.

இந்த நிலையில், நடிகர் பர்வின் தபாஸ் இன்று அதிகாலையில் துரதிர்ஷ்டவசமாக கார் விபத்தில் சிக்கியுள்ளார். அதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் பாந்த்ராவில் உள்ள தனியார் மருத்துவமனையின் ஐசியுவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது மனைவி நடிகை ப்ரீத்தி ஜாங்கியானியும் மருத்துவமனையில் அவரை கவனித்து வருகிறார்.

இந்த விபத்து குறித்த முழு விவரம் இன்னும் வெளிவரவில்லை. இந்த விபத்து குறித்து ப்ரோ பாஞ்சா லீக்கின் நிர்வாகிகள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், துரதிர்ஷ்டவசமான கார் விபத்தில் சிக்கிய பர்வின் தபாஸ், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். "இந்த சவாலான நேரத்தில் எங்கள் எண்ணங்கள் பர்வின் மற்றும் அவரது குடும்பத்தினருடன் உள்ளன. பர்வின் விரைவாகவும் பூரண குணமடையவும் வாழ்த்துகிறோம்" என்று அதில் குறிப்பிட்டுள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com