பிரபல மலையாள இயக்குனர் ஷாஜி கருண் காலமானார்


பிரபல மலையாள இயக்குனர் ஷாஜி கருண் காலமானார்
x
தினத்தந்தி 29 April 2025 9:51 AM IST (Updated: 29 April 2025 11:14 AM IST)
t-max-icont-min-icon

பிரபல மலையாள இயக்குனர் ஷாஜி கருண் தனது 73-வது வயதில் காலமானார்.

திருவனந்தபுரம்,

மலையாள திரையுலகில் புகழ்பெற்ற இயக்குனர்களில் ஒருவர் ஷாஜி நீலகண்டன் கருணாகரன். கேரள மாநில சாலசித்திர அகாடமி, கேரள மாநில திரைப்பட மேம்பாட்டு கழகம் ஆகியவற்றின் தலைவராக பதவி வகித்திருந்தார். ஷாஜி கருண் என்றழைக்கப்பட்ட இவர் இயக்கிய 'பிறவி, வானபிரஸ்தம், குட்டி ஸ்ராங்க்' ஆகிய திரைப்படங்களுக்கு மூன்று தேசிய விருதினை பெற்றவர்.

பல்வேறு சாதனைகள் படைத்து மலையாள சினிமாவுக்கு பெருமை சேர்த்த ஷாஜி கருண் (வயது 73), புற்றுநோய் பாதிப்பால் நீண்ட நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று அவர் காலமானார். திரைத்துறையினர், ரசிகர்கள் என பலரும் ஷாஜி கருணுக்கு தங்களது இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.

1 More update

Next Story