இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கும் பிரபல தெலுங்கு நடிகர்

இயக்குனர் பி.எஸ்.மித்ரன் தற்போது நடிகர் கார்த்தியை வைத்து சர்தார் 2 படத்தை இயக்கி வருகிறார்.
இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கும் பிரபல தெலுங்கு நடிகர்
Published on

சென்னை,

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனர்களில் ஒருவர் பி.எஸ்.மித்ரன். இவர் 'இரும்புத்திரை, ஹீரோ, சர்தார்' போன்ற படங்களை இயக்கியுள்ளார். தற்போது நடிகர் கார்த்தியை வைத்து சர்தார் 2 இயக்கி வருகிறார். ஸ்பை திரில்லர் கதைக்களத்தில் உருவாகி வரும் இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

இந்த படத்தினை முடித்த பின்னர் இயக்குனர் பி.எஸ்.மித்ரன் அடுத்ததாக தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகரான நாக சைதன்யாவை வைத்து புதிய படம் ஒன்றை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தெலுங்கு, தமிழ் என இரு மொழிகளில் உருவாக உள்ள இந்த படத்தை ஏ.கே. என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இதற்கான பணிகள் 'சர்தார் 2' படத்தை முடித்த பின்னர் துவங்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com