பிரபாஸ் - பிரசாந்த் வர்மா படத்தில் கதாநாயகி இவரா?


Prabhas & Prasanth Varma’s film to feature this rising actress
x

'அனுமான்' படத்தை இயக்கி பிரபலமானவர் பிரசாந்த் வர்மா.

சென்னை,

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் பிரபாஸ். இவர் ராஜமவுலி இயக்கிய பாகுபலி படத்தின் உலகம் முழுவதும் பிரபலமானார். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான 'சலார் மற்றும் கல்கி 2898 ஏடி ' ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. அதனை தொடர்ந்து 'ஸ்பிரிட், சலார் 2, தி ராஜா சாப்' ஆகிய படங்களை தன் கைவசம் வைத்துள்ளார்.

பிரபாஸ் அடுத்ததாக இயக்குனர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார். 'அனுமான்' படத்தை இயக்கி பிரபலமானவர் பிரசாந்த் வர்மா. பிரபாஸின் புதிய படம் சூப்பர் ஹீரோ கதைக்களத்தில் உருவாக உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க பாக்யஸ்ரீ போர்ஸிடம் பேச்சுவார்த்தை நடந்துவருவதாக தெரிகிறது. விரைவில் இதுதொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பாாக்கப்படுகிறது. பாக்யஸ்ரீ போர்ஸ் தற்போது துல்கர் சல்மானுடன் காந்தா படத்திலும், ராம் பொத்தினேனிக்கு ஜோடியாக ஒரு படத்திலும் நடித்து வருகிறார்.

1 More update

Next Story