பிரபு தேவாவின் 'பேட்ட ராப்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

எஸ்.ஜே.சினு இயக்கத்தில் பிரபுதேவா நடித்துள்ள 'பேட்ட ராப்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
'பேட்ட ராப்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
Published on

சென்னை,

தமிழ் சினிமாவில் நடிகராகவும், இயக்குனராகவும், நடன இயக்குனராகவும் வலம் வருபவர் பிரபு தேவா. இவர் தற்போது விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'தி கோட்' திரைப்படத்தில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இதற்கிடையில் எஸ்.ஜே.சினு இயக்கத்தில் பிரபுதேவா நடித்திருக்கும் புதிய திரைப்படம் 'பேட்ட ராப்'. இந்த படத்தில் கதாநாயகியாக வேதிகா நடித்துள்ளார்.

இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். மேலும் விவேக் பிரசன்னா, பகவதி பெருமாள், ரமேஷ் திலக், கலாபவன் ஷாஜோன், மைம் கோபி, ரியாஸ் கான் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு ஜூன் மாதம் புதுச்சேரியில் தொடங்கி சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதியில் நடைபெற்றது. ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ப்ளூ ஹில் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் ஜோபி பி. சாம் தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் மோசன் போஸ்டர், இரண்டு பாடல்கள் மற்றும் டீசர் ஆகியவை வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்திற்கு தணிக்கைக் குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. இந்தநிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, இப்படம் வருகிற 27-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இது குறித்த பதிவை நடிகை வேதிகா எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com