பல வருடங்களுக்கு பிறகு இணைந்த பிரபுதேவா, வடிவேலு கூட்டணி

இந்த படத்தை சாம் ஆண்டன் இயக்குகிறார்.
Prabhudeva & Vadivelu joining together for a Film
Published on

சென்னை,

நீண்ட வருடங்களுக்கு பிறகு பிரபுதேவா, வடிவேலு இணைந்து புதிய படத்தில் நடிக்கவுள்ளனர். இந்த படத்தை ''டார்லிங்'', ''100'', ''எனக்கு இன்னொரு பெயர் இருக்கு'' போன்ற படங்களை இயக்கிய சாம் ஆண்டன் இயக்குகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

பிரபுதேவா, வடிவேலு ஏற்கனவே இணைந்து ''காதலன்'', ''எங்கள் அண்ணா'', ''மனதை திருடிவிட்டாய்'', ''மிஸ்டர் ரோமியோ'' போன்ற படங்களில் நடித்தனர். பிரபுதேவா இயக்கிய ''போக்கிரி'' மற்றும் ''வில்லு'' திரைப்படங்களில் வடிவேலு பணியாற்றியுள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com