“டிராகன் 2” பட அப்டேட் கொடுத்த பிரதீப் ரங்கநாதன்

‘டிராகன்’ திரைப்படத்தின் 2 வது பாகம் விரைவில் உருவாகவுள்ளதை புகைப்படம் வெளியிட்டு பிரதீப் ரங்கநாதன் உறுதிப்படுத்தியுள்ளார்.
“டிராகன் 2” பட அப்டேட் கொடுத்த பிரதீப் ரங்கநாதன்
Published on

இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து மற்றும் பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் வெளியான ‘டிராகன்’ திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது. ரூ.100 கோடி வசூலை கடந்து இப்படம் சாதனை படைத்தது.

ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்த இந்தத் திரைப்படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்திருந்தார். மேலும், கயாடு லோஹர், அனுபமா பரமேஸ்வரன், இயக்குநர்கள் கே.எஸ்.ரவிக்குமார், மிஷ்கின், யூடியூப் பிரபலங்களான விஜே சித்து மற்றும் ஹர்ஷத் கான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

இந்நிலையில், டிராகன் படம் வெளியாகி ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், 'டிராகன்- 2' பட அப்டேட்டை பிரதீப் ரங்கநாதன் கொடுத்துள்ளார். பிரதீப் ரங்கநாதன் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், “நண்பனாக இருந்து இயக்குநராக மாறுவதற்கு எனக்கு சிறிது நேரம் பிடித்தது. ஆனால், இப்போது இரண்டிலும் சிறந்ததை நான் பெற்றுள்ளேன். விரைவில்...” என்று 2 டிராகன் படம் கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

அதே போல், டிராகன் பட இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து தனது எக்ஸ் பதிவில்,“டிராகன் வெளியாகி ஓராண்டு நிறைவடைந்து உள்ளது. பிரதீப் ரங்கநாதனுடன் பணியாற்றியது சிறப்பாக இருந்தது. மீண்டும் ஒருமுறை இந்த காம்போ ஒன்றிணையவுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com