பிலிம்பேர் விருதுடன் நடிகர் பிரதீப் ரங்கநாதன்

பிலிம்பேர் விருதுடன் நடிகர் பிரதீப் ரங்கநாதன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.
பிலிம்பேர் விருதுடன் நடிகர் பிரதீப் ரங்கநாதன்
Published on

சென்னை,

தமிழ் சினிமாவில் 'கோமாளி' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். அதன்பிறகு, 'லவ் டுடே' படத்தை இயக்கி நடித்தார். இந்த இரு படங்களும் நல்ல வரவேற்பை பெற்றன. இதனைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கும் 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படத்திலும், அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் டிராகன் படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில், பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் அடுத்த திரைப்படத்தை இயக்குனர் சுதா கொங்கராவிடம் உதவியாளராக பணியாற்றிய கீர்த்தீஸ்வரன் இயக்க உள்ளார்.

இப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக மமிதா பைஜூ நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று கூறப்படுகிறது.

'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படம் எதிர்காலத்தில் நடக்கும் காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் பரவி வருகிறது.

லவ் டுடே படத்திற்காக பிரதீப் ரங்கநாதனுக்கு சிறந்த அறிமுக கதாநாயகனுக்கான பிலிம்பேர் விருதை பெற்றுள்ளார்.ஒரு கையில் பிலிம்பேர் விருதுடன் பிரதீப் ரங்கநாதன் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com