பிரதீப் ரங்கநாதனின் “டியூட்” படத்தின் 2வது பாடல் வெளியீடு

பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜு நடித்துள்ள “டியூட்” படம் அக்டோபர் 17ம் தேதி வெளியாக உள்ளது.
Published on

சென்னை,

தமிழ் சினிமாவில் 'கோமாளி' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இவரது நடிப்பில் சமீபத்தில் டிராகன் படம் வெளியாகி நல்லவரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து இவர், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் 'லவ் இன்ஸுரன்ஸ் கம்பெனி'என்ற படத்தில் நடித்துள்ளார்.

அதனை தொடர்ந்து கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் 'டியூட்' படத்திலும் நடித்துள்ளார். மைத்ரீ மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் 'டியூட்' படத்தில் நாயகியாக மமிதா பைஜு நடித்துள்ளார். இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைக்கும் இந்தப் படத்தில் சரத் குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். முழுவதுமாக காமெடி கலந்த படமாக இப்படம் அக்டோபர் 17ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் முதல் பாடலான ''ஊரும் பிளட்'' வெளியாகி வைரலானது.

இந்நிலையில், 'டியூட்' படத்தின் இரண்டாவது பாடலான 'நல்லாஇரு போ' என்ற பாடல் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com