பிரதீப் ரங்கநாதனின் “டியூட்” டிரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜு இணைந்து நடித்துள்ள ‘டியூட்’ படம் வரும் 17ம் தேதி வெளியாக உள்ளது.
சென்னை,
தமிழ் சினிமாவில் 'கோமாளி' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இவரது நடிப்பில் சமீபத்தில் டிராகன் படம் வெளியாகி நல்லவரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து இவர், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் 'லவ் இன்ஸுரன்ஸ் கம்பெனி'என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் டிசம்பர் 18ம் தேதி வெளியாகிறது.
கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் ‘டியூட்’ படத்திலும் நடித்துள்ளார். மைத்ரீ மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் ‘டியூட்’ படத்தில் நாயகியாக மமிதா பைஜு நடித்துள்ளார். இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்துள்ள இந்தப் படத்தில் சரத் குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். முழுவதுமாக காமெடி கலந்த படமாக இப்படம் வரும் 17ம் தேதி வெளியாக உள்ளது.இப்படத்திலிருந்து ''ஊரும் பிளட்'' என்ற பாடல் வெளியாகி இணையத்தில் வைரலானது.
இந்த நிலையில், ‘டியூட்’ திரைப்படத்தின் டிரெய்லரை வரும் 9ம் தேதி வெளியிட உள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. .இப்படம் 17ம் தேதி தீபாவளி வெளியீடாக திரைக்கு வருகிறது.






