பிரதீப் ரங்கநாதனின் “எல்ஐகே” படத்தின் ‘எனக்கென யாருமில்லையே’ புரோமோ வீடியோ வெளியீடு

விக்னேஷ் சிவன் இயக்கிய ‘எல்.ஐ.கே’ படத்தில் பிரதீப் ரங்கநாதன், எஸ்.ஜே. சூர்யா, கீர்த்தி ஷெட்டி, சீமான், யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
பிரதீப் ரங்கநாதனின் “எல்ஐகே” படத்தின் ‘எனக்கென யாருமில்லையே’ புரோமோ வீடியோ வெளியீடு
Published on

சென்னை,

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' (எல்.ஐ.கே) என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில், எஸ்.ஜே. சூர்யா, கீர்த்தி ஷெட்டி, சீமான், யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும், ரவுடி பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து இந்த படத்தினை தயாரித்துள்ளன. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். பேன்டஸி காதல் கதைக்களத்தில் உருவான இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

அனிருத் இசையில் முன்னதாக வெளியான ‘தீமா’ பாடல் நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து வெளியான இரண்டாவது பாடலான ‘பட்டுமா’ பாடலும் நல்ல வரவேற்பை பெற்றது. இதனிடையே வெளியான படத்தின் டிரெய்லர் பலரது கவனத்தை ஈர்த்தது. 2040ஆம் ஆண்டு காலகட்டத்தில் கண்கவரும் உலகத்தில் கதைக்களம் நடப்பதாக டிரெய்லர் அமைந்திருந்தது. ‘எல்ஐகே’ திரைப்படம் ‘டூட்’ திரைப்படத்தின் ரிலீஸ்க்காக ஒத்திவைத்துப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் படத்தில் இடம்பெறும் ‘எனக்கென யாருமில்லையே’ பாடல் நாளை வெளியாகிறது. அதற்கான புரோமோ தற்போது வெளியாகியுள்ளது. மீண்டும் காதலர் தினத்தை முன்னிட்டு 11 வருடங்களுக்கு பிறகு வெளியாகும் இப்பாடல் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

அனிருத் - விக்னேஷ் சிவன் கூட்டணியில் 2015ம் ஆண்டு காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாகி ஹிட்டடித்த ‘எனக்கென யாருமில்லையே’ பாடல் ‘ஆக்கோ’ படத்தில் இடம்பெற்றது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com