'வெறுப்பு மற்றும் மதவெறியை விரட்டியடித்த மக்களுக்கு நன்றி' - பிரகாஷ் ராஜ் ட்வீட்

கர்நாடக தேர்தல் முடிவுகள் குறித்து நடிகர் பிரகாஷ் ராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
'வெறுப்பு மற்றும் மதவெறியை விரட்டியடித்த மக்களுக்கு நன்றி' - பிரகாஷ் ராஜ் ட்வீட்
Published on

பெங்களூரு,

224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு கடந்த 10-ந்தேதி தேர்தல் நடைபெற்ற நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதுவரை வெளியான முடிவுகளின்படி, காங்கிரஸ் கட்சி 136 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றுகிறது.

இந்நிலையில் கர்நாடக தேர்தல் முடிவுகள் குறித்து நடிகர் பிரகாஷ் ராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "வெறுப்பையும், மதவெறியையும் விரட்டியடித்த கர்நாடக மக்களுக்கு நன்றி" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

Prakash Raj (@prakashraaj) May 13, 2023 ">Also Read:

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com