அல்லு அர்ஜுனின் ‘ஏஏ22’ – மனம் திறந்த மிருணாள் தாகூர்

‘ஏஏ22’ படத்தில் நடிக்கிறீர்களா? என்ற கேள்விக்கு மிருணாள் தாகூர் பதிலளித்தார்
அல்லு அர்ஜுனின் ‘ஏஏ22’ – மனம் திறந்த மிருணாள் தாகூர்
Published on

சென்னை,

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக விளங்கும் அல்லு அர்ஜுனின் அடுத்த படமான ‘ஏஏ22’ குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இப்படத்தில் நடிகை மிருணாள் தாகூர் நடிப்பதாக சமீப காலமாக பேசப்பட்டு வருகிறது.

இதற்கிடையில், சமீபத்தில் மிருணாள் அளித்த ஒரு பேட்டியில், தொகுப்பாளர் ‘ஏஏ22’ படத்தில் நீங்கள் நடிக்கிறீர்களா? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அவர், சிரிப்புடன், “ஓ… அப்படியா? அல்லு அர்ஜுனுடன் ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்று எல்லோரும் பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். அது உண்மையில் நடந்தால், இந்த பேட்டியை மீண்டும் பார்த்து கொண்டாடுவேன்,” என்று தெரிவித்தார்.

Also Read
மிருணாள் தாகூர் - துல்கர் சல்மானின் முதல் ஆல்பம் பாடல் - இணையத்தில் வைரல்
அல்லு அர்ஜுனின் ‘ஏஏ22’ – மனம் திறந்த மிருணாள் தாகூர்

அல்லு அர்ஜுனுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்ற தனது விருப்பத்தை வெளிப்படையாக பகிர்ந்த மிருணாள் தாகூரின் இந்த கருத்து, ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது. ‘ஏஏ22’ படத்தை அட்லீ இயக்கி வருகிறார். பாலிவுட் நடிகை தீபிகா படும்கோன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com