"சிறை" பட இயக்குனருக்கு கார் பரிசாக வழங்கிய தயாரிப்பாளர் லலித் குமார்

இப்படம் வருகிற 25ந் தேதி வெளியாக உள்ளது.
சென்னை,
தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க நடிகர்களில் ஒருவர் விக்ரம் பிரபு. இவர் தற்போது இயக்குனர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் சிறை என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கான கதை இயக்குனர் தமிழ் எழுதியுள்ளார்.
இதனை 'செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ' சார்பில், தயாரிப்பாளர் லலித் குமார் தயாரித்துள்ளார். இதில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக அனந்தா நடித்திருக்கிறார். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.
இப்படம் வருகிற 25ந் தேதி வெளியாக உள்ளது. படத்தின் ரிலீஸை முன்னிட்டு படக்குழுவினருர் தீவிர புரமோஷன் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், சிறை படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி நேந்று சென்னையில் நடைபெற்றது. அதில், இயக்குனர்கள் பா.ரஞ்சித், வெற்றிமாறன், தமிழ் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். அப்போது, சிறை பட தயாரிப்பாளர் லலித்குமார் இயக்குனர் சுரேஷ் ராஜகுமாரிக்கு படம் ரிலீஸுக்கு முன்பே காரை பரிசாக வழங்கியுள்ளார்.






