கவர்ச்சி படங்களை வெளியிட்ட நடிகை ராகிணி திவேதி

நடிகை ராகிணி திவேதி கவர்ச்சி புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் வெளியிட்டு இருக்கிறார்.
கவர்ச்சி படங்களை வெளியிட்ட நடிகை ராகிணி திவேதி
Published on

கன்னட திரைஉலகில் பிரபல நடிகையாக இருந்து வருபவர் ராகிணி திவேதி. இவர் தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். இந்த நிலையில் இவர் போதைப்பொருள் வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டு பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது ஜாமீனில் வெளி வந்துள்ள அவர் மீண்டும் திரைஉலகில் பிசியாக நடித்து வருகிறார். காந்திகிரி, ஒன் டூ ஒன், கர்வா-3, ஜானி வாக்கர் உள்பட ஏராளமான படங்கள் தற்போது அவரது கைவசம் உள்ளன. இந்த நிலையில் அவர் நீச்சல் குளத்தில் படுகவர்ச்சியாக போட்டோசூட் நடத்தி உள்ளார். அந்த புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் வெளியிட்டு இருக்கிறார். அந்த புகைப்படங்களைப் பார்த்த அவரது ரசிகர்கள் அவருக்கு பாராட்டு தெரிவித்து வருகிறார்கள். தற்போது அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com