பாடகரான ராம் பொதினேனி....வைரலாகும் 'பப்பி ஷேம்' பாடல்


‘Puppy Shame’ Song from Andhra King Taluka: Ram Pothineni’s Vocals Bring Energy and Vibe
x
தினத்தந்தி 8 Sept 2025 10:45 PM IST (Updated: 8 Sept 2025 10:46 PM IST)
t-max-icont-min-icon

இப்படத்தில் பாக்யஸ்ரீ போர்ஸ் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.

சென்னை,

ராம் பொதினேனியின் ''ஆந்திரா கிங் தாலுகா'' படத்திலிருந்து 2-வது பாடலான ''பப்பி ஷேம்'' வெளியாகி உள்ளது. விவேக் மற்றும் மெர்வின் இசையமைத்துள்ள இந்த பாடலை ராம் பொதினேனியே பாடியுள்ளார். இப்பாடல் தற்போது வைரலாகி வருகிறது.

ஏற்கனவே இப்படத்தின் முதல் பாடலான ''நுவ்வுண்டே சாலே'' பாடலுக்கான வரிகளை ராம் பொதினேனி எழுதி இருந்தார். மகேஷ் பாபு இயக்கத்தில் உருவாகி வரும் ''ஆந்திரா கிங் தாலுகா'' படத்தில் பாக்யஸ்ரீ போர்ஸ் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.

மேலும், உபேந்திரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படம் நவம்பர் மாதம் 28-ம் தேதி திரைக்கு வர உள்ளது.

1 More update

Next Story