சினிமாவை விட்டு விலகலா? ஆன்மிக பயணத்தில் நடிகை அமலாபால்

அமலாபால் மனஅமைதி தேடி கோவில் கோவிலாக ஆன்மிக பயணம் மேற்கோண்டு வருகிறார். இதனையடுத்து அமலாபால் சினிமாவை விட்டு விலக முடிவு செய்து விட்டாரா? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
சினிமாவை விட்டு விலகலா? ஆன்மிக பயணத்தில் நடிகை அமலாபால்
Published on

தமிழில் மைனா படம் மூலம் பிரபலமான அமலாபால் வேட்டை, தெய்வத்திருமகள், தலைவா, நிமிர்ந்து நில், வேலை இல்லா பட்டதாரி உள்பட பல படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். மலையாளம், தெலுங்கிலும் அதிக படங்களில் நடித்துள்ளார்.

சமீபகாலமாக அமலாபால் அடுத்தடுத்து பிரச்சினைகளை சந்தித்தார். ஏற்கனவே டைரக்டர் விஜய்யை காதலித்து திருமணம் செய்து பின்னர் அவரை விவாகரத்து செய்து பிரிந்தார். பாடகர் பல் நிந்தர் சிங் தன்னிடம் மோசடி செய்துவிட்டதாக போலீசில் புகார் அளித்து கைது செய்யவைத்தார்.

தற்போது அமலாபால் மனஅமைதி தேடி கோவில் கோவிலாக ஆன்மிக பயணம் மேற்கோண்டு வருகிறார். பழனிமுருகன் கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடந்த மறுநாளே சென்று வழிபாடு நடத்தினார். இப்போது இந்தோனேஷியாவில் பாலி தீவில் உள்ள ஆசிரமத்துக்கு சென்று தங்கி உள்ளார். ஆசிரமத்தில் இருக்கும் புகைப்படங்களை வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.

அந்த ஆசிரமத்தில் சில நாட்கள் தங்கி தியானம், யோகா பயிற்சிகள் எடுத்துவிட்டு இந்தியா திரும்பிய பின் மேலும் பல கோவில்களுக்கு ஆன்மிக பயணம் செல்ல இருக்கிறார்.

இதனால் அமலாபால் சினிமாவை விட்டு விலக முடிவு செய்து விட்டாரா? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com