ராணவ் நடிக்கும் “பிரேக் பாஸ்ட்” படத்தின் மோசன் போஸ்டர் வெளியீடு

ராணவ் நடிக்கும் ‘பிரேக் பாஸ்ட்’ திரைப்படத்திற்கு ஜி. வி. பிரகாஷ் இசையமைத்திருக்கிறார்.
ராணவ் நடிக்கும் “பிரேக் பாஸ்ட்” படத்தின் மோசன் போஸ்டர் வெளியீடு
Published on

இயக்குநர் ஏ ஆர் காந்தி கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகியுள்ள 'பிரேக் பாஸ்ட்' திரைப்படத்தில் ராணவ், ரோஸ்மினி சம்பத்குமார், கஸ்தூரி, அர்ச்சனா, கார்த்திக் மோகன், அமிர்தா ரங்கநாத் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

எம். வி. பன்னீர்செல்வம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். காதல் பின்னணியில் கொமர்சல் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை பத்மா கிளாசிக் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கிரிஜா வரதராஜ் தயாரித்திருக்கிறார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியிட திட்டமிடப்பட்டு வரும் இப்படத்தின் டைட்டில் மற்றும் டைட்டிலுக்கான மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் எதார்த்தத்தை ஏற்றுக் கொள் என்ற வாசகமும், பிரேக் பாஸ்ட் ஆகிய வார்த்தைகளுக்கு நடுவே.. தாலியை கையெறி குண்டுடன் இணைத்து வடிவமைக்கப்பட்டு இருப்பது... காதல் தொடர்பான உணர்வுகளை விவரிக்கும் படைப்பு என்பது தெரிய வருவதால் ரசிகர்களின் கவனத்தை கவர்ந்திருக்கிறது. மேலும் இந்த மோசன் போஸ்டரில் இடம் பிடித்திருக்கும் புல்லாங்குழல் இசை ...ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றிருக்கிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com