மான் வேட்டையால் ஆத்திரம்; சல்மான்கானை சுட்டுக்கொல்ல சதி

சல்மான்கானை சுட்டுகொல்ல சதி நடந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
மான் வேட்டையால் ஆத்திரம்; சல்மான்கானை சுட்டுக்கொல்ல சதி
Published on

இந்தி பட உலகில் அதிக சம்பளம் வாங்கும் முன்னணி நடிகர் சல்மான்கான். வாரிசு நடிகர்களால் இளம் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டதாக பேசப்படும் சர்ச்சையில் இவரது பெயரும் அடிபடுகிறது. ஏற்கனவே படப்பிடிப்பில் அரிய வகை மான்களை வேட்டையாடிய வழக்கில் சிக்கி சிறைக்கு சென்ற அவர் பின்னர் ஜாமீனில் விடுதலையானார்.

மானை தெய்வமாக வணங்கும் பிஷ்னோய் இன மக்கள் சல்மான்கான் மீது ஆத்திரத்தில் உள்ளனர். அந்த இனத்தை சேர்ந்த பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோய் கொலை, கொள்ளை வழக்குகளில் சிக்கி ஜெயிலில் இருக்கிறார். அவர் சல்மான்கானை கொலை செய்வோம் என்று மிரட்டல் விடுத்து இருந்தார்.

இந்த நிலையில் லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டாளியான ராகுல் என்பவரை கொலை வழக்கு ஒன்றில் பரிதாபாத் போலீசார் கைது செய்து விசாரித்தனர். அப்போது சல்மான்கானை சுட்டுகொல்ல சதி நடந்துள்ள அதிர்ச்சி தகவல் வெளியானது. சல்மான்கானை சுட்டுக் கொல்ல பாந்தராவில் உள்ள அவரது வீட்டை உளவுபார்த்து எப்போது வீட்டுக்கு வெளியே வருகிறார் என்பதை கண்காணித்ததாகவும். கொலை திட்டத்தை அரங்கேற்ற பிஷ்னோய் உத்தரவுக்காக காத்து இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். இது இந்தி பட உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com