ராகவா லாரன்ஸின் 'பென்ஸ்' பட அப்டேட்

ராகவா லாரன்ஸ் நடிக்கும் 'பென்ஸ்' படம் லோகேஷ் கனகராஜின் 'எல்.சி.யூ' வில் இணைந்துள்ளது.
ராகவா லாரன்ஸின் 'பென்ஸ்' பட அப்டேட்
Published on

சென்னை,

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் ராகவா லாரன்ஸ். இவரது நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்'. இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் 'பென்ஸ்' படத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்க உள்ளர்.

லோகேஷ் கனகராஜின் 'ஜி ஸ்குவாட்' நிறுவனம் தயாரிக்க உள்ள இப்படத்தை 'ரெமோ' பட இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்க உள்ளார். தற்போது இந்த படத்தின் ப்ரீ புரொடக்சன் பணிகள் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இதற்கு முன்பு வெளிவந்த 'விக்ரம், கைதி, லியோ' போன்ற படங்களை போல, 'பென்ஸ்' படமும் (லோகேஷ் சினிமாடிக் யூனிவர்ஸ்) எல்.சி.யூ-வில் இணைந்துள்ளது. இதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது.

இந்த நிலையில் இப்படத்தின் அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது, பென்ஸ் திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் மே மாத இறுதியில் அல்லது ஜூன் மாதம் முதல் வாரத்தில் தொடங்கும் என்ற தகவல் கிடைத்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com