

சென்னை,
ராஜேஷ் மாதவன் தற்போது தமிழ் நடிகர் பரத்துடன் புதிய படத்தில் இணைந்துள்ளார். டுவின் டவர் புரொடக்ஷன்ஸ் மற்றும் டி குரோனிக்கல் புரொடக்ஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை எம். குரு எழுதி இயக்குகிறார்.
சமீபத்தில் வெளியாகி உலகம் முழுவதும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘ஜெயிலர்-2’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘அல்லபெ லேலோ...’ பாடலில், மைக்கில் பாடும் நபராக நடித்து கவனம் ஈர்த்தவர் ராஜேஷ் மாதவன். மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராகத் திகழும் இவர், அந்தப் பாடலில் தோன்றியபோது பலரும் அனிருத் என நினைத்துப் பாராட்டியதும் உண்டு.
இந்நிலையில், ராஜேஷ் மாதவன் தற்போது தமிழ் நடிகர் பரத்துடன் புதிய படத்தில் இணைந்துள்ளார். டுவின் டவர் புரொடக்ஷன்ஸ் மற்றும் டி குரோனிக்கல் புரொடக்ஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை எம். குரு எழுதி இயக்குகிறார். இப்படத்தில் சிவேஷ்தா ராஜ், மீனாட்சி தினேஷ், ரக்ஷனா இந்துசூடன் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். முனீஷ்காந்த், சுஜிதா, கட்டெறும்பு ஸ்டாலின் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
நகைச்சுவை, காதல், குடும்ப உணர்வுகள், சென்டிமென்ட் என அனைத்து அம்சங்களும் நிறைந்த கமர்ஷியல் குடும்பப் பொழுதுபோக்குத் திரைப்படமாக இது உருவாகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் கேரளாவில் நடைபெற்று வருகிறது. படத்தின் தலைப்பு மற்றும் கூடுதல் விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளன.