“வித் லவ்” படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டிய ரஜினிகாந்த்

அபிஷன் ஜீவிந்த், அனஸ்வரா நடித்துள்ள ‘வித் லவ்’ படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
“வித் லவ்” படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டிய ரஜினிகாந்த்
Published on

சென்னை,

‘டூரிஸ்ட் பேமிலி’ படத்தின் மூலம் பிரபலமான இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் கதாநாயகனாக நடித்துள்ள ‘வித் லவ்’ படம் கடந்த 6ந் தேதி வெளியானது. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் நடித்துள்ளார். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

‘டூரிஸ்ட் பேமிலி’ படத்தில் அபிஷன் ஜீவிந்திடம் உதவி இயக்குனராக இருந்த மதன் இப்படத்தை இயக்கியுள்ளார். எம்ஆர்பி என்டர்டெயின்மென்ட் மற்றும் சவுந்தர்யா ரஜினிகாந்த் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். காதல் கதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் காவ்யா அனில், ஹரிஷ்குமார், சச்சின் நாச்சியப்பன், தேனி முருகன், ஆர்.ஜே.ஆனந்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

பள்ளிகால கதையுடன் கூடிய நகைச்சுவை காதல் படமாக உருவான இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தாலும் இளம் தலைமுறை ரசிகர்களிடம் வரவேற்பு கிடைத்து வருகிறது. இப்படம் 3 நாட்களில் ரூ.11 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

‘வித் லவ்’ திரைப்படம் வெற்றி பெற்றுள்ள நிலையில், படக்குழுவினரை நடிகர் ரஜினிகாந்த் நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். படக்குழுவுடன் நடிகர் ரஜினிகாந்த் உரையாடியது, அவர்களை வெகுவாக பாராட்டியது, அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட காட்சிகள் அடங்கிய வீடியோவை சவுந்தர்யா ரஜினிகாந்த் பகிர்ந்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com