பிரபல மலையாள இயக்குநருடன் இணையும் ரஜினிகாந்த்

ரஜினிகாந்தின் அடுத்த படத்தை பிரபல மலையாளர் இயக்குநர் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரபல மலையாள இயக்குநருடன் இணையும் ரஜினிகாந்த்
Published on

சென்னை,

நடிகர் ரஜினிகாந்த்தின் புதிய படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் வேட்டையன் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் அக்டோபர் 10 ம் தேதி வெளியாகிறது. படத்தின் டீசர் ரசிகர்களைக் கவர்ந்த நிலையில், விரைவில் டிரெய்லர் வெளியாகும் எனத் தெரிகிறது. இதற்கிடையே, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்திலும் ரஜினி நடித்து வருகிறார்.

கடந்த ஆண்டு மலையாளத்தில் உருவாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் டோவினோ தாமஸ் நடித்த 2018. கடந்த 2018 ம் ஆண்டு கேரளாவில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை ஒட்டி இந்த படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குனர் ஜூட் ஆண்டனி. இந்த படம் சுமார் 200 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்து மலையாள சினிமாவின் அதிகபட்ச வசூல் செய்த படமாக உருவாகியுள்ளது.

இயக்குநர் ஜூட் ஆண்டனி ரஜினிக்கு கதை கூறியுள்ளதாகவும் இந்தப் படத்திற்கான பேச்சுவார்த்தைகள் துவங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com