தமிழ் சினிமாவில் புதிய வசூல் சாதனை படைத்த ரஜினியின் “ஜெயிலர் 2”

ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவான ‘ஜெயிலர் 2’ திரைப்படம் கடந்த 15ந் தேதி திரையரங்குகளில் வெளியானது.
தமிழ் சினிமாவில் புதிய வசூல் சாதனை படைத்த ரஜினியின் “ஜெயிலர் 2”
Published on: 

ரஜினியின் ‘ஜெயிலர் 2’ திரைப்படம் 7 நாட்களில் உலகளவில் ரூ.549 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம் கடந்த 15ந் தேதி திரையரங்குகளில் வெளியானது. 2023-ம் ஆண்டு வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற நிலையில், அதன் இரண்டாம் பாகத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

நட்சத்திர பட்டாளம்

முதல் பாகத்தில் நடித்த மோகன்லால், சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், மிர்ணா மேனன், யோகிபாபு உள்ளிட்டோர் இந்தப் படத்திலும் இடம்பெற்றுள்ளனர். இவர்களுடன் எஸ்.ஜே.சூர்யா, ஹிருத்திக் ரோஷன், மிதுன் சக்கரவர்த்தி, விஜய் சேதுபதி, நமோ நாராயணா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தைப் பார்த்துவிட்டு, தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் தனது எக்ஸ் தளத்தில் பாராட்டி பதிவிட்டுள்ளார்.

7 நாட்களில் ரூ.549 கோடி வசூல்

இந்நிலையில், ‘ஜெயிலர் 2’ திரைப்படம் 7 நாட்களில் ரூ.549 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. விரைவில் இப்படம் ரூ.1,000 கோடி வசூலை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com