ரஜினியின் “ஜெயிலர் 2” படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்

நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‘ஜெயிலர் 2’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் ஜூன் மாதம் ரிலீஸாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஜினியின் “ஜெயிலர் 2” படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்
Published on

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் கடந்த 2023-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் ‘ஜெயிலர்’. இந்தப் படத்தில் ரம்யா கிருஷ்ணன், மிர்ணா, விநாயகன், வசந்த் ரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்தார். சன் பிக்சர்ஸ் தயாரித்த இந்தப் படம் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இந்தப் படம் ரூ.600 கோடி வரை வசூலித்ததாக படக்குழு அறிவித்தது.

‘ஜெயிலர்’ படத்தை தொடர்ந்து ரஜினி - நெல்சன் கூட்டணியில் உருவாகி வரும் படம் ‘ஜெயிலர் 2’. இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வர அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், பாலிவுட் நடிகர் மிதுன் சக்கரவர்த்தி, சந்தானம், சுராஜ் வெஞ்சரமூடு, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இப்படம் வரும் ஜூன் மாதம் திரைக்கு வரலாம் என கூறப்படுகிறது. இப்படத்தில் ஷாருக்கான் நடிக்க இருந்த கதாபாத்திரத்தில் தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

‘ஜெயிலர்’ படத்தின் இரண்டாம் பாகத்தின் ஓ.டி.டி உரிமத்தை அமேசான் பிரைம் ரூ.160 கோடிக்கு வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ‘ஜெயிலர்’ படத்தின் முதல் பாகத்தின் ஓ.டி.டி உரிமத்தை அமேசான் பிரைம் ரூ.100 கோடிக்கு வாங்கியது குறிப்பிடத்தக்கது.

‘ஜெயிலர் 2’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதனை கேக் வெட்டி படக்குழுவினர் கொண்டாடியுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்களை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், ‘ஜெயிலர் 2’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் ஜூன் மாதம் ரிலீஸாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை ஆகஸ்ட் மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com