ரஷியாவில் வெளியாகும் ரஜினியின் ‘2.0’

ரஷியாவில் ரஜினியின் ‘2.0’ திரைப்படம் வெளியாக உள்ளது.
ரஷியாவில் வெளியாகும் ரஜினியின் ‘2.0’
Published on

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷய்குமார், எமி ஜாக்சன் ஆகியோர் நடித்து 3டி தொழில் நுட்பத்தில் தயாரான 2.0 படம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திரைக்கு வந்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. ரூ.500 கோடிக்கு மேலான செலவில் இந்த படத்தை எடுத்து இருந்தனர். ரூ.800 கோடிக்கு அதிகமாக வசூல் ஈட்டியது.

2.0 படத்தை சீனாவை தவிர்த்து உலகம் முழுவதும் திரையிட்டனர். அனைத்து நாடுகளிலுமே நல்ல வரவேற்பு கிடைத்தது. எனவே அடுத்து சீனாவிலும் சீன மொழியில் டப்பிங் செய்து 2.0 படத்தை வெளியிடுவதற்கான பணிகளை தொடங்கி உள்ளனர். அங்கு 10 ஆயிரம் தியேட்டர்களில் திரையிடுகின்றனர்.

ஏற்கனவே விஜய் நடித்த மெர்சல் படமும் சீனாவில் வெளியாகி வரவேற்பை பெற்றது. அமீர்கான் நடித்த 3 இடியட்ஸ், தங்கல், பிகே இந்தி படங்களும் சீனாவில் வெளியாகி வசூல் குவித்தன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சீனாவை தொடர்ந்து ரஷியாவிலும் 2.0 படத்தை திரையிட உள்ளதாக படக்குழுவினர் அறிவித்து உள்ளனர். அங்கு அடுத்த மாதம் (ஜூலை) 12-ந்தேதி 2.0 வெளியாக இருக்கிறது. ரஷிய மொழியில் டப்பிங் செய்து வெளியிடுகின்றனர். விரைவில் 2.0 படத்தின் ரஷிய மொழி டிரைலரையும் வெளியிட இருக்கிறார்கள்.

X

Daily Thanthi
www.dailythanthi.com