“பெத்தி” படத்தின் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த ராம் சரண்

புச்சி பாபு சனா இயக்கத்தில் உருவாகி வரும் "பெத்தி" படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார்.
“பெத்தி” படத்தின் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த ராம் சரண்
Published on

சென்னை,

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ராம் சரண் நடிப்பில் கடைசியாக வெளியான கேம் சேஞ்சர் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. பிரபல இயக்குநர் ஷங்கர் இயக்கிய இந்த படத்தை தொடர்ந்து, அடுத்த படத்தில் வெற்றியை பெற வேண்டும் என்ற முனைப்பில், இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கத்தில் உருவாகி வரும் பெத்தி படத்தில் ராம் சரண் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் கதாநாயகியாக பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் நடிக்கிறார். மேலும், கன்னட சூப்பர் ஸ்டார் சிவ ராஜ்குமார், மிர்சாபூர் புகழ் திவ்யேந்து, ஜகபதி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Also Read
லெஜண்ட் சரவணன் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் அறிவிப்பு
“பெத்தி” படத்தின் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த ராம் சரண்

அதிக செலவில் பிரமாண்டமாக உருவாகி வரும் இந்த படத்திற்கு, இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார். ரித்தி சினிமாஸ் மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படம், முதலில் வருகிற மார்ச் 27-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், பெத்தி படத்தின் புதிய ரிலீஸ் தேதியை நடிகர் ராம் சரண் தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதன்படி, இந்த படம் வருகிற ஏப்ரல் 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read
பெண்கள் பிரீமியர் லீக்: சாம்பியன் பட்டம் வெல்லப்போவது யார்.? பெங்களூரு-டெல்லி அணிகள் இன்று மோதல்
“பெத்தி” படத்தின் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த ராம் சரண்

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com