ரூ.100 கோடி வசூல் செய்த தனுஷ் படத்திற்கு ’நோ’ சொன்ன ராம் சரண்... காரணம் என்ன தெரியுமா?

தனுஷ் நடித்து மிகப்பெரிய வசூல் சாதனை படைத்த திரைப்படம் 'வாத்தி'
ரூ.100 கோடி வசூல் செய்த தனுஷ் படத்திற்கு ’நோ’ சொன்ன ராம் சரண்... காரணம் என்ன தெரியுமா?
Published on

ஐதராபாத்,

'ஆர்ஆர்ஆர்' படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு உலகளாவிய ரசிகர்களைப் பெற்றுள்ள ராம் சரண் குறித்து ஒரு சுவாரசியமான தகவல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்து மிகப்பெரிய வசூல் சாதனை படைத்த திரைப்படம் 'வாத்தி'. கல்வி முறையில் உள்ள குறைபாடுகளைத் தோலுரித்துக் காட்டிய இப்படம் 100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.

ஆனால், இந்த கதையை இயக்குநர் முதலில் ராம் சரணிடம்தான் கூறியுள்ளார். கதை பிடித்திருந்தாலும், இது ஒரு 'கிளாஸ்' ரகப் படம் என்பதால், தனது மாஸ் பிம்பத்திற்கு ஏற்றவாறு ஆக்சன் மற்றும் எலிவேஷன் காட்சிகள் இருக்குமா? ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா? என்ற தயக்கத்தில் ராம் சரண் இப்படத்தை நிராகரித்ததாகக் கூறப்படுகிறது. அதன் பின்னரே இந்த வாய்ப்பு தனுஷிற்கு சென்றுள்ளது.

Also Read
"காதலித்தது உண்மைதான்.. ஆனால்" - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை
ரூ.100 கோடி வசூல் செய்த தனுஷ் படத்திற்கு ’நோ’ சொன்ன ராம் சரண்... காரணம் என்ன தெரியுமா?

சமீபத்தில் வெளியான சங்கரின் 'கேம் சேஞ்சர்' (Game Changer) திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறத் தவறிய நிலையில், ராம் சரண் தற்போது 'பெத்தி' (Peddi) திரைப்படத்தின் மீது முழுக் கவனத்தையும் செலுத்தி வருகிறார்.

'வாத்தி' போன்ற ஒரு ஹிட் படத்தை தவறவிட்டாலும், ஜூன் மாதம் வெளியாக உள்ள 'பெத்தி' திரைப்படம் மூலம் அவர் கம்பேக் கொடுப்பார் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com