‘பெத்தி’ படப்பிடிப்பில் ராம் சரணுக்கு காயம்: எப்படி இருக்கிறார் ? - படக்குழு விளக்கம்

‘பெத்தி’ படம் ஏப்ரல் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
‘பெத்தி’ படப்பிடிப்பில் ராம் சரணுக்கு காயம்: எப்படி இருக்கிறார் ? - படக்குழு விளக்கம்
Published on

ஐதராபாத்,

புச்சி பாபு சனா இயக்கத்தில் ராம் சரண் நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் ‘பெத்தி’. இப்படத்தின் சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டபோது ராம் சரணுக்கு இடது கண்ணில் லேசான காயம் ஏற்பட்டதாக படக்குழு அறிவித்துள்ளது.

ஆனால், அவர் தற்போது நலமுடன் இருப்பதாகவும், நாளையே மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read
‘கர’ படம்: கருணாஸின் கதாபாத்திர அறிமுக போஸ்டர் வெளியீடு
‘பெத்தி’ படப்பிடிப்பில் ராம் சரணுக்கு காயம்: எப்படி இருக்கிறார் ? - படக்குழு விளக்கம்

‘பெத்தி’ படத்தில் ஜான்வி கபூர் கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் சிவ ராஜ்குமார், திவ்யேந்து, ஜெகபதி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படம் வருகிற ஏப்ரல் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com