நடிகர் ராம் சரணின் “பெத்தி” படத்தின் எடிட்டிங் பணி நிறைவு

புச்சி பாபு சனா இயக்கத்தில் ராம் சரண், ஜான்வி கபூர் நடித்துள்ள ‘பெத்தி’ திரைப்படம் ஜூன் 4ம் தேதி வெளியாகவுள்ளது.
நடிகர் ராம் சரணின் “பெத்தி” படத்தின் எடிட்டிங் பணி நிறைவு
Published on

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ராம் சரண் நடிப்பில் கடைசியாக வெளியான ‘கேம் சேஞ்சர்’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. பிரபல இயக்குனர் ஷங்கர் இயக்கிய இந்த படத்தை தொடர்ந்து, அடுத்த படத்தில் வெற்றியை பெற வேண்டும் என்ற முனைப்பில், இயக்குனர் புச்சி பாபு சனா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பெத்தி’ படத்தில் ராம் சரண் நடித்துள்ளார்.

இந்த படத்தில் கதாநாயகியாக பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் நடித்துள்ளார். மேலும், கன்னட சூப்பர் ஸ்டார் சிவ ராஜ்குமார், மிர்சாபூர் புகழ் திவ்யேந்து, ஜகபதி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அதிக செலவில் பிரமாண்டமாக உருவாகியுள்ள இந்த படத்திற்கு, இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். ரித்தி சினிமாஸ் மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தில் இடம் பெற்றுள்ள சிறப்பு பாடல் ஒன்றிற்காக ராம்சரண் உடன் ஒரு பாடலுக்கு நடனமாடிள்ளார் சுருதிஹாசன்.

உள்ளூரில் விளையாட்டு கதைக்களத்தை மையமாக வைத்து உருவாகும் இந்தப் படத்திற்காக தனது உடலை கட்டுக்கோப்பாக வைக்க உடற்பயிற்சி செய்த புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். அதில் ரசிகர்கள், "இந்தியாவின் ஹல்க்" எனக் கூறினார்கள். ஏ. ஆர். ரகுமான் இசையமைத்த இப்படத்தின் முதல் பாடலான சிக்கிரி பெரிய வெற்றியைப் பெற்றிருந்தது.

இந்நிலையில், ராம் சரண், ஜான்வி கபூர் நடித்துள்ள ‘பெத்தி’ திரைப்படம் ஜூன் 4ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com