படமாகும் டி.வி தொடர்... சக்திமான் வேடத்தில் ரன்வீர் சிங்?

படமாகும் டி.வி தொடர்... சக்திமான் வேடத்தில் ரன்வீர் சிங்?
Published on

சூப்பர் ஹீரோ தொடரான சக்திமான், தூர்தர்ஷனில் 90-களில் பல எபிசோடுகளாக ஒளிபரப்பப்பட்டு வரவேற்பை பெற்றது.

இந்த தொடர் குழந்தைகளை மிகவும் கவர்ந்தது. இதில் பண்டிட் கங்காதர் வித்யாதர் மாயாதர் ஓம்கார்நாத் சாஸ்திரி என்ற சக்திமான் கதாபாத்திரத்தில் முகேஷ் கன்னா நடித்து இருந்தார்.

சக்திமான் தொடரை தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் மொழிகளில் சினிமா படமாக எடுக்கும் பணிகள் தொடங்கி உள்ளன.

இதுகுறித்து முகேஷ் கன்னா கூறும்போது, "சக்திமான் தொடர் ரூ.200 கோடி முதல் ரூ.300 கோடி வரையிலான பட்ஜெட்டில் சர்வதேச தரத்தில் சினிமா படமாக உருவாகும். இதுதொடர்பான ஒப்பந்தம் தற்போது கையெழுத்தாகி உள்ளது'' என்றார்.

இந்த படத்தில் சக்திமான் வேடத்தில் நடிக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. சக்திமானாக நான் நடிக்கவில்லை என்று முகேஷ் கன்னா தெரிவித்து விட்டார். சக்திமான் வேடத்தில் பிரபல இந்தி நடிகர் ரன்வீர் சிங் நடிக்க வாய்ப்பு இருப்பதாக ஏற்கனவே கூறப்பட்டது.

இந்த நிலையில் படக்குழுவினர் தற்போது ரன்வீர் சிங்கை அணுகி சக்திமான் கதாபாத்திரத்தில் நடிக்க பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. நடிகை தீபிகா படுகோனே கணவரான ரன்வீர் சிங் இந்தியில் முன்னணி கதாநாயகனாக வலம் வருகிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com