ரன்வீர் சிங்கின் ‘டான் 3’ பட விவகாரம்: திரைப்பட சங்கங்களுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்

தயாரிப்பாளர் டி.பி. அகர்வால், ரன்வீர் சிங்குக்கு எதிராக விதிக்கப்பட்டதாக கூறப்படும் தடையை எதிர்த்து மும்பை சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
ரன்வீர் சிங்கின் ‘டான் 3’ பட விவகாரம்: திரைப்பட சங்கங்களுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்
Published on

மும்பை,

ரன்வீர் சிங் நடிப்பில் வெளியான ‘துரந்தர்’ திரைப்படம் பெரும் வரவேற்பையும் வசூல் சாதனையையும் பெற்றுள்ளது. இதையடுத்து, இயக்குனர் பர்ஹான் அக்தர் இயக்கத்தில் உருவாகும் ‘டான் 3’ திரைப்படத்தில் ரன்வீர் சிங் நடிக்க இருந்தார். ஆனால் கடைசி நேரத்தில் அவர் அந்தப் படத்திலிருந்து விலகியதாக தகவல்கள் வெளியாகின. இந்த சம்பவம் இந்தி திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.

ரன்வீர் சிங்குக்கு எதிராக தொழிலாளர் சங்கங்களின் நடவடிக்கை

‘டான் 3’ படத்திலிருந்து விலகியதைத் தொடர்ந்து, ரன்வீர் சிங்கின் படங்களில் இனி பணியாற்ற மாட்டோம் என்று மேற்கு இந்திய திரைப்பட தொழிலாளர்கள் கூட்டமைப்பு அறிவித்ததாக கூறப்படுகிறது. மேலும், திரைப்படத் தொழிலாளர் சங்கங்களின் கூட்டமைப்பான எப்.டபிள்யூ.ஐ.சி.இ. மற்றும் இந்திய திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கமான ஐ.எம்.பி.பி.ஏ. ஆகியவை ரன்வீர் சிங்கிற்கு எதிராக ‘ரெட் கார்டு’ தடை விதித்ததாக தகவல்கள் வெளியாகின.

நீதிமன்றத்தில் வழக்கு; சங்கங்களுக்கு நோட்டீஸ்

இந்த நிலையில், தயாரிப்பாளர் டி.பி. அகர்வால், ரன்வீர் சிங்குக்கு எதிராக விதிக்கப்பட்டதாக கூறப்படும் தடையை எதிர்த்து மும்பை சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். தனது மனுவில், கலைஞர்கள் அல்லது தொழில்நுட்பக் கலைஞர்களை பணியாற்ற விடாமல் தடுக்க எந்த சங்கத்திற்கும் சட்டப்பூர்வ அதிகாரம் இல்லை என்றும், இத்தகைய தடைகள் ஒரு நபரின் தொழில் சுதந்திரம் மற்றும் வாழ்வாதார உரிமையை பாதிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த மனுவை விசாரித்த மும்பை சிவில் நீதிமன்றம், எப்.டபிள்யூ.ஐ.சி.இ. மற்றும் ஐ.எம்.பி.பி.ஏ. அமைப்புகளுக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு, திரைப்படத் துறையில் சங்கங்களின் அதிகார வரம்பு மற்றும் கலைஞர்களின் தொழில் சுதந்திரம் தொடர்பாக முக்கிய கவனத்தை ஈர்த்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com