டோக்கியோவில் ராஷ்மிகா மந்தனா... சர்வதேச மேடையில் இந்திய நடிகைக்கு கிடைத்த பெருமை

இந்த ஆண்டின் 'சிறந்த அனிமேஷன்' விருதை ராஷ்மிகா மந்தனா வழங்கினார்.
டோக்கியோவில் ராஷ்மிகா மந்தனா... சர்வதேச மேடையில் இந்திய நடிகைக்கு கிடைத்த பெருமை
Published on

டோக்கியோ,

ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற 10வது சர்வதேச அனிமே விருதுகள் 2026(Anime Awards 2026) விழாவில் இந்திய நடிகை ராஷ்மிகா மந்தனா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விருது வழங்கியுள்ளார்.

சோனி நிறுவனத்தின் அனிமே ஸ்ட்ரீமிங் தளமான கிரன்ச்சிரோல் ஆண்டுதோறும் அனிமே விருதுகளை வழங்கி வருகிறது. அந்த வகையில், 10வது சர்வதேச அனிமே விருதுகள் 2026 விழா நேற்று (மே 23) டோக்கியோவில் கோலாகலமாக நடைபெற்றது.

இந்த விழாவில் இந்தியாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ராஷ்மிகா மந்தனா பங்கேற்றார். மேடையில் ‘பிளாக் பாந்தர்’ (Black Panther) பட நடிகர் வின்ஸ்டன் டியூக் உடன் இணைந்து, இந்த ஆண்டின் 'சிறந்த அனிமேஷன்' விருதை அவர் வழங்கினார்.

சிறந்த அனிமே விருதை ’சோலோ லெவலிங் சீசன் 2: அரைஸ் பிரம் தி ஷேடோ’ (Solo Leveling Season 2: Arise from the Shadow) வென்றது. ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற இந்த அனிமே தொடர், முக்கிய பிரிவில் வெற்றி பெற்று கவனம் ஈர்த்தது.

Also Read
"பரிமளா & கோ" படத்தின் புரோமோ வீடியோ வெளியீடு
டோக்கியோவில் ராஷ்மிகா மந்தனா... சர்வதேச மேடையில் இந்திய நடிகைக்கு கிடைத்த பெருமை

சர்வதேச அளவில் நடைபெறும் அனிமே விருதுகள் மேடையில் இந்திய நடிகையாக ராஷ்மிகா மந்தனா பங்கேற்று விருது வழங்கியது, இந்திய சினிமாவுக்கு கிடைத்த ஒரு முக்கியமான அங்கீகாரமாக பார்க்கப்படுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com