ராஷ்மிகா மந்தனாவின் “காக்டெயில் 2” பட டிரெய்லர் வெளியானது

ஹோமி அடஜானியா இயக்கத்தில் ஷாகித் கபூர், ராஷ்மிகா மந்தனா, கீர்த்தி சனோன் நடித்த ‘காக்டெயில் 2’ படம் வருகிற 19ம் தேதி வெளியாகவுள்ளது.
ராஷ்மிகா மந்தனாவின் “காக்டெயில்  2” பட டிரெய்லர் வெளியானது
Published on

‘காக்டெயில்’ முதல் பாகம் 2012ல் வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்தது. முதல் பாகத்தில் சைப் அலிகான், தீபிகா படுகோன் நடித்திருந்தார்கள். ஹோமி அடஜானியா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘காக்டெயில் 2’ படத்தில் ஷாகித் கபூர், ராஷ்மிகா மந்தனா, கீர்த்தி சனோன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இப்படத்தை மேடாக் பிலிம்ஸ் தயாரித்துள்ளது.

இந்நிலையில், ‘காக்டெயில் 2’ படத்தின் டிரெய்லர் வெளியானது. மூவருக்குள்ளான காதல் கதையாக உருவாகியிருக்கும் இந்தப் படத்தின் டிரெய்லர் ரசிகர்களிடையே கவனம் ஈர்த்துள்ளது. இந்த டிரெய்லரில் ராஷ்மிகாவுடன் ஷாகித் காதலில் இருக்க, அவரிடம் கீர்த்தி சனோன் காதலிப்பது போல காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்தப் படத்தில் மூவரும் இணைந்து உறவு கொள்வது தொடர்பாக பேசும் காட்சிகள் இணையத்தில் சர்ச்சையை எழுப்பியுள்ளது. இப்படம் வருகிற ஜூன் 19ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com