ரத்னகுமாரின் “29” படத்தின் “பூ” வீடியோ பாடல் வெளியானது

ரத்னகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘29’ படத்தில் விது மற்றும் ப்ரீத்தி அஸ்ரானி நடித்துள்ளனர்.
ரத்னகுமாரின் “29” படத்தின் “பூ” வீடியோ பாடல் வெளியானது
Published on

சென்னை,

2017-ம் ஆண்டு வெளியான 'மேயாத மான்' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இயக்குனர் ரத்ன குமார். இதன்பின் இவர் 'ஆடை', 'குலுகுலு' போன்ற படங்களை இயக்கியும் உள்ளார். மேலும் 'மாஸ்டர்', 'விக்ரம்', 'லியோ' உள்ளிட்ட படங்களுக்கு திரைக்கதை மற்றும் வசனமும் எழுதியுள்ளார்.

தற்போது, கார்த்திக் சுப்புராஜின் 'ஸ்டோன் பெஞ்ச்', லோகேஷ் கனகராஜின் 'ஜி-ஸ்குவாட்' ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் '29' என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இதில் விது, ப்ரீத்தி அஸ்ரானி, மாஸ்டர் மகேந்திரன், அவினாஷ், செனாஷ், பிரேம்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

இந்த நிலையில், 29 படத்தின் ‘பூ’ வீடியோ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடல் இயக்குனர் ரத்ன குமார் வரிகளில் ரவி பாடியுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com