“பராசக்தி” படத்தின் டப்பிங் பணியில் ரவி மோகன்

சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ படம் வரும் ஜனவரி 14-ம் தேதி வெளியாக இருக்கிறது.
சென்னை,
இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ‘பராசக்தி’ படத்தில் நடித்துள்ளார். இவருடன் அதர்வா, ஸ்ரீலீலா, ரவி மோகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதில் சிவகார்த்திகேயன் கல்லூரி மாணவனாக நடித்திருக்கிறார். இப்படத்துக்கு ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். ஸ்ரீலீலா கதாநாயகியாக நடிக்கிறார்.இப்படம் இந்தி திணிப்பை மையமாக கொண்டு உருவாகி வருவதாக கூறப்படுகிறது.
படத்தின் படப்பிடிப்பு காரைக்குடி, மதுரை, இலங்கை, பொள்ளாச்சியைத் தொடர்ந்து இறுதியாக சென்னையில் முழுமையாக நிறைவு பெற்றது.தற்போது இந்த படத்திற்கான பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. ‘பராசக்தி’ படத்தின் ஆடியோ உரிமையை சரிகம சவுத் நிறுவனம் பெற்றுள்ளது. அடுத்தாண்டு பொங்கல் விடுமுறையையொட்டி ஜனவரி 14-ந் தேதி 'பராசக்தி' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தில் இருந்து ‘அடி அலையே’ எனும் பாடல் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

இந்த நிலையில், ‘பராசக்தி’ திரைப்படத்தின் ரவி மோகனுக்கான டப்பிங் பணிகள் துவங்கியுள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது.






