ரவி மோகனின் “புரோ கோட்” படத்தின் புரோமோ வெளியீடு


கார்த்திக் யோகி இயக்கத்தில் ‘புரோ கோட்’ என்ற திரைப்படத்தில் ரவி மோகன் நடிக்கிறார்.

ஜெயம் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான நடிகர் ரவி மோகன், எம் குமரன் மகாலட்சுமி, உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்ரமணியம், பேராண்மை, தனி ஒருவன் போன்ற பல வெற்றி படங்கள் கொடுத்து தனக்கென ஒரு இடத்தை திரைத்துறையில் பிடித்துள்ளார். தற்போது பராசக்தி என்ற திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் உடன் நடித்துவரும் ரவி மோகன், சமீபத்தில் ‘ரவி மோகன் ஸ்டுடியோஸ்’ என்ற பெயரில் புதிய திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.

டிக்கிலோனா திரைப்படத்தை இயக்கிய கார்த்திக் யோகி இயக்கத்தில் ‘புரோ கோட்’ என்ற திரைப்படத்தை தயாரித்து நடிக்கிறார் ரவி மோகன். இப்படத்தில் எஸ்.ஜே சூர்யா, ஷரத்தா ஸ்ரீனாத், மாளவிகா மனோஜ், ஸ்ரீ கௌரி பிரியா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இந்நிலையில், ‘புரோ கோட்’ படத்தின் புரோமோ வீடியோவை ரவி மோகன் ஸ்டுடியோஸ் வெளியிட்டுள்ளது.

1 More update

Next Story