விக்ரமின் 'வீர தீர சூரன் 2' படத்துடன் மோதும் ரவி மோகனின் 'ஜீனி'

இந்த இரண்டு படங்களும் வருகிற மார்ச் மாதம் வெளியாகும் என்ற தகவல் கிடைத்துள்ளது.
விக்ரமின் 'வீர தீர சூரன் 2' படத்துடன் மோதும் ரவி மோகனின் 'ஜீனி'
Published on

சென்னை,

நடிகர் விக்ரம் தனது 62 - வது படமான 'வீர தீர சூரன் 2' படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தை 'சேதுபதி, சித்தா' படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் அருண்குமார் இயக்கியுள்ளார். இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சராமுடு, துஷரா விஜயன், சித்திக் ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்தை எச்.ஆர்.பிக்சர்ஸ் சார்பில் ரியா ஷிபு தயாரிக்கிறார். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். ஆக்சன் திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படம் மார்ச் மாதம் வெளியாக உள்ளது.

அதே போல, ரவி மோகன் நடிப்பில் ஐசரி கே.கணேசன் தயாரித்துள்ள 'ஜீனி' திரைப்படமும் மார்ச் மாதம் வெளியாக உள்ளது. இந்த படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேசனல் நிறுவனம் சார்பில், அறிமுக இயக்குனர் புவனேஷ் அர்ஜுன் இயக்கியுள்ளார். இப்படத்தில் கீர்த்தி ஷெட்டி, கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் வாமிகா கேபி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்த நிலையில், இந்த இரண்டு படங்களும் வருகிற மார்ச் 28-ந் தேதி திரைக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. இந்த இரண்டு படங்களும் ஒரே நாளில் திரையரங்கில் வெளியாகும் என்ற தகவல் கிடைத்துள்ளதால், ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com