"அன்பின் மதிப்பு அதை இழந்தவர்களுக்குத்தான் புரியும்" - இன்ஸ்டாகிராமில் திடீர் பதிவு போட்ட ரெஜினா

நடிகை ரெஜினா கசாண்ட்ரா, அன்பு குறித்துப் பகிர்ந்துள்ள கருத்துக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

"அன்பின் மதிப்பு அதை இழந்தவர்களுக்குத்தான் புரியும்" - இன்ஸ்டாகிராமில் திடீர் பதிவு போட்ட ரெஜினா
Published on

சென்னை:

தமிழ், தெலுங்கு எனப் பல மொழித் திரையுலகில் தனது நடிப்பால் முத்திரை பதித்து வரும் நடிகை ரெஜினா கசாண்ட்ரா, அன்பு குறித்துப் பகிர்ந்துள்ள கருத்துகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவில், "புதிய நாள், ஆனால் அதே நான் தான். அன்பிடம் சரணடைகிறேன். விஷயங்கள் நடப்பவை நடக்கட்டும் என்று விட்டுவிடுவதை பலர் பலவீனம் என்று தவறாக நினைக்கிறார்கள். ஆனால், அன்பு என்பது ஒரு அமைதியான வலிமை" என்று குறிப்பிட்டுள்ளார்.

Also Read
தனிமை மகிழ்ச்சியாக இருக்கிறது - நடிகை ஹன்சிகா

"அன்பின் மதிப்பு அதை இழந்தவர்களுக்குத்தான் புரியும்" - இன்ஸ்டாகிராமில் திடீர் பதிவு போட்ட ரெஜினா

மேலும் , "ஒவ்வொரு நாளும் உங்களுக்காக நீங்கள் ஒரு புன்னகையோடு எழுந்து நிற்க வேண்டிய நாள். நீங்கள் அன்பு செய்யப்பட தகுதியானவர் என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதீர்கள். நேசிப்பதிலும் நேசிக்கப்படுவதிலும் இருக்கும் மகிழ்ச்சி நமக்குத் தெரிவதற்குக் காரணம், அதை இழப்பதில் உள்ள வலி நமக்குத் தெரியும் என்பதுதான்" என்று பதிவிட்டுள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com