சிம்புதேவன் இயக்கிய 'நவோரியா' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகியுள்ள இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
சிம்புதேவன் இயக்கிய 'நவோரியா' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
Published on: 

சென்னை,

'நவோரியா' திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, இப்படம் வரும் டிசம்பர் 18-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இயக்குநர் சிம்புதேவன்

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைக்களங்களுடன் நகைச்சுவை கலந்து திரைப்படங்களை உருவாக்கியவர் இயக்குநர் சிம்புதேவன். இவரது இயக்கத்தில் வெளியான 'இம்சை அரசன் 23-ம் புலிகேசி', 'அறை எண் 305-ல் கடவுள்', 'இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம்' ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன. இதன் மூலம் தனக்கென தனி ரசிகர் வட்டத்தையும் உருவாக்கினார். தொடர்ந்து விஜய் நடிப்பில் வெளியான 'புலி', 'கசட தபற', 'போட்' உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கினார். தற்போது நடிகர் விமல் நடிப்பில் புதிய திரைப்படம் ஒன்றை இயக்கியுள்ளார்.

நவோரியா திரைப்படம்

சிம்புதேவன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு 'நவோரியா' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதில் விமலுடன் ஆரி அர்ஜுனன், தம்பி ராமையா, வடிவுக்கரசி, பால சரவணன், நிழல்கள் ரவி, பாலாஜி சக்திவேல், மன்சூர் அலிகான், கஸ்தூரி, அப்புக்குட்டி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார்.

வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகியுள்ள இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

ரிலீஸ் தேதி அறிவிப்பு

இந்நிலையில், 'நவோரியா' திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, இப்படம் வரும் டிசம்பர் 18-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மேலும், படத்தில் இடம்பெற்றுள்ள கதாபாத்திரங்களின் அறிமுக போஸ்டர்களையும் படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் விமல் 'ஆதி' என்ற கதாபாத்திரத்திலும், அன்ஷீத்தல் 'அபி' என்ற கதாபாத்திரத்திலும், ஆரி அர்ஜுனன் 'கவுதம் ராஜேந்திரன்' என்ற கதாபாத்திரத்திலும் நடித்திருப்பது தெரியவந்துள்ளது.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு சிம்புதேவனின் வித்தியாசமான படைப்பாக வெளியாகவுள்ள 'நவோரியா' திரைப்படம் ரசிகர்களிடம் எந்த அளவுக்கு வரவேற்பைப் பெறும் என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.

X