

சென்னை,
நடிகர் அருண் விஜய் தற்போது இயக்குனர் ஹரி இயக்கத்தில் 'யானை' திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் நடிகை பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் சமுத்திரக்கனி, ராதிகா சரத்குமார், ராஜேஷ், போஸ் வெங்கட், யோகி பாபு, இமான் அண்ணாச்சி, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். யானை திரைப்படத்தை டிரம்ஸ்டிக் புரொடக்சன்ஸ் தயாரித்துள்ளது. ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
கடந்த டிசம்பரில் யானை திரைப்படத்தின் டீசர் வெளியானது. இந்த நிலையில் தற்போது இந்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்து படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி வருகிற மே மாதம் 6-ந்தேதி யானை திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.