“மூன்றாம் கண்” படத்தின் புரோமோ வீடியோ வெளியீடு

சசோ கணேசன் இயக்கத்தில் விதார்த், கலையரசன் நடித்துள்ள ‘மூன்றாம் கண்’ படம் வரும் 12ம் தேதி வெளியாகவுள்ளது.
“மூன்றாம் கண்” படத்தின் புரோமோ வீடியோ வெளியீடு
Published on

அறிமுக இயக்குனர் சசோ கணேசன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மூன்றாம் கண்’. இந்த படத்தில் விதார்த், கலையரசன், திரிகுண், சந்தோஷ் பிரதாப், ஜான்விஜய், தேஜு அஸ்வினி, அதுல்யா சந்திரா, ஸ்வேதா டோரத்தி, சுந்தரா டிராவல்ஸ் ராதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ட்ரெண்டிங் எண்டர்டெயின்மெண்ட் மற்றும் ஒயிட் ஹார்ஸ் ஸ்டுடியோஸ் சார்பில் கே. சசிகுமார் தயாரித்துள்ள இப்படத்திற்கு அஜீஸ் இசையமைத்துள்ளார். என்.எஸ். உதயகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். ராஜ் பிரதாப் பின்னணி இசை அமைத்துள்ளார்.

ஹைபர்லிங்க் கிரைம் திரில்லராக உருவாகும் இந்தப் படம் பற்றி இயக்குநர் சகோ கணேசன் கூறும்போது, “ நிறுவனம் ஒன்றின் நிர்வாக இயக்குநர் திடீரென கொல்லப்படுகிறார். அவரைக் கொன்றது நான்தான் என்று 4 பேர் சொல்கிறார்கள். அதில் ஒருவர்தான் உண்மையான குற்றவாளி. அவர் யார் என்பதைக் கண்டு பிடிப்பதுதான் கதை. இதில் காதல் காட்சிகள் இருக்காது. சந்தோஷ் பிரதாப் கற்பனை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இதன் திரைக்கதையில் நிறைய புதிய விஷயங்கள் இருக்கும். நிஜமான பேக்டரியில் கொலை காட்சியைப் படமாக்கியபோது அங்கு பணியாற்றியவர்கள் நிஜம் என நினைத்துப் பயந்துவிட்டார்கள் ” என்றார்.

இத்திரைப்படம் வரும் 12ம் தேதி வெளியாகவுள்ளது. இதற்கிடையில் இந்த படத்தின் டீசர் வெளியாகி வைரலானது. அதனை தொடர்ந்து தற்போது இந்த படத்தின் புரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com